........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:191

பூமியைக் கொஞ்சம் மாற்று!!

குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்று தானே
பிஞ்சு மனதில் ஏது வஞ்சம்!
உன்னிடத்தில் இல்லை லஞ்சம்!!

பொய்யும் புரட்டும்
மனிதரிடை மட்டும்தான்
உனக்கு இன்னும் கற்பிக்கப்படவில்லை
அதனாலதான் உன் புன்னகை
தெய்வீகமாய் இருக்கிறது!!

உனது பாஷை
தேவ பாஷையாய் இருக்கிறது
உனக்குப் பசித்தால் 
அழ மட்டுந்தான் தெரியும்!
ஆனால் பிறரை அழ வைக்க
எங்களுக்கு மட்டுமே தெரியும்!!

உனது மொழி
இலக்கணம் இல்லா சங்கீதம்
இனிமை நிறைந்த புது வேதம்
நீ ஏழையாய் இருந்தாலும்
உன் சிரிப்பு
ஏழுலகையும் விலை பேசும்

தெய்வ குழந்தையே நீ
தீவிரவாதியின் வீட்டில் பிறந்து
தீர்த்திடு அவரின் வன்மத்தை
அரசியல் வாதிக்கு பிறந்து
அன்பு மழலை பேசி
பிஞ்சு பாதத்தை கொஞ்சிட
கொடுத்து விடு!
அப்போதாவது அவர்கள்
சுயநலம் விடுத்து
பொது நலம் புகுந்திடட்டும்!!
கலப்படக்காரனுக்கு வாரிசாய் வந்து
அவன் நெஞ்சில் 
கருணை பிறந்திட ஆணையிடு!!

உன்னால்தான் முடியும்
ஏனென்றால் நீ
தெய்வத்திற்கு இணையன்றோ?
உனது பாஷையும் தேவ பஷையன்றோ?
தெய்வமே படட்டும் எங்கள்மீது
உனது மூச்சுக்காற்று!
அமைதிப் பூங்காவாய்
இந்த பூமியைக் கொஞ்சம் மாற்று!! 

-"ராம்கோ" மாரிமுத்து, அரியலூர்.

 
m

 

"ராம்கோ" மாரிமுத்து அவர்களது பிற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.