........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:194

காதல் நோயறிவீர்...!

ஆடியின் எதிரில் நின்று
அழகு செய்வேன்

உடுத்தியதை நீக்கி
புதியதை அணிவேன்
என்னவனுக்கு - இந்த
வண்ணம் பிடிக்குமோ...

வண்ணம் மாற்றி மாற்றி
என்னவன் வரவை
எதிர்பார்ப்பேன்...

தீட்டிய மையை அழித்து - புதுக்
கோட்டினை வரைவேன்...

நுதல் மீது படிந்த குழலை
விரல் கொண்டு வலை செய்வேன்...

இதழுக்கு வண்ணம் தடவி - ஆடியை
இருநூறு முறையாவது பார்த்திருப்பேன்...

என் செயலை எவரும்
கண்டிலரென
எண்ணம் கொண்டிருப்பேன்...
எண்ணமது பொய்யோ...

கொல்லென சிரிப்பொலி
சுள்ளென செவி தொட
மெல்லத் திரை நீக்கிப் பார்த்தேன்...

ஏதடி பேதையே...
காதலது பித்தானதோ
கால நேரமின்றி
ஆடி எதிரில் நின்று
அழகு பார்க்கிறாயே...

இளையவளே நீ - சித்தம்
இழந்தாயோ என
தோழியர் கூடி நின்று
ஏளனமாய் நகைத்தனர்...

சிரிக்கும் தோழியரே
அறிவில்லை உம் எல்லோருக்கும்

காதல் எனவொன்று - குளிர்
காற்றோ கொடு நெருப்போ
பேதை நான் அறியாமல்
காதலில் சிக்குண்டேன்...

காதல் செய்தாலன்றோ
தோழியரே - நீவீர்
காதல் நோயறிவீர்

ஏதும் அறியாமல்
ஏளனம் செய்கிறீரே...! 

-ஆர். கனகராஜ்.

 
m
 

ஆர்.கனகராஜ் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.