........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 205

சாவதற்குத் தயார்...!

அவன் புணர்ச்சிக்கு உட்படுத்தி
கொட்டடிக்குள் அடைபடுவதிலிருந்து
சாவதற்கு அவர்கள்
தயாராகவே இருக்கிறார்கள்...!

கொத்து கொத்தாய் வீழும் குண்டால்
குறையும் மனிதத்தை எதிர்த்து
சகோதர நாடு தரும்
சாக்கடை முகாம் கடந்து
சாவதற்கு அவர்கள்
தயாராகவே இருக்கிறார்கள்...!

தொல்லை தரும் வெள்ளை வேன்
வெள்ளை உடை மனிதர்கள்
தொடரும் சோதனைச் சாவடி
இல்லா தேசம் வேண்டி
சாவதற்கு அவர்கள்
தயாராகவே இருக்கிறார்கள்...!

உண்ணா நோன்பிருந்து
தினம் ஒருவராய் தீக்குளித்து
போராளி உடை தரித்து
மூப்பை கண்டடைந்த பின்
சாவதற்கு அவர்கள்
தயாராகவே இருக்கிறார்கள்...!

-பாண்டித்துரை, சிங்கப்பூர்

 

 
m

 

பாண்டித்துரை அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.