கவிதை: 213
இந்தியாவின்
குமுறல்...!
ஈராறுப் பத்துக்கோடி ஈன்ற என் வயிறு
எரிமலையாய்க் குமுறுதே! என்ன செய்வேன்?
பாராளும் எனநினைத்து பன்றிப்போல் குட்டிபோட்டேன்
பதைக்கிறேன் பதறுகிறேன் பாவிநான் குமுறுகிறேன்.
சமச்சீர் நிலைநிறுவி தரணிபுகழ வாழ்வர் எண்ணி
சகலவித சௌகர்யங்கள் சமைத்து நான் வைத்திருக்கேன்
ஈராறுப் பத்துக்கேடி அதை எடுத்து தனதாக்கி -மற்றவரை
ஏழையாக்கி கொக்கரிக்க என்ன நான் செய்வேன்?
பகுத்தறிவுப் பண்பாட்டில் பதம்பட்ட என்உடம்பு
பகிர்ந்தூட்டிய பால்உணவு அன்பே அறிவே -ஆனால்
பாவிகளாய் மற்றவரை பகல் இரவு வதைவதைக்க
பாவிமகள் கதறுகிறேன் வேறென்ன செய்வேன்?
மிருகத்துக்குக் கொள்கை உண்டு அது மேலாதிக்கம் செய்வதில்லை
நரகத்துக்கு பலவழிகள் உண்டு நான்கு எல்லை அதற்கில்லை
மிருக நரக வேலி போட்டு மற்றவரை மிதமிஞ்சி வதைவதைக்க
மேன்மையுற வாழ இவ்வுலகில் மீதம் எனக்கு எதுயிருக்கு?
மனிதநேயம் என்றிசைத்து மயக்கி அதில் கிடத்தி
மனித அங்கம் சிதைய மனமறிந்து உதவுகிறான்
ஈழ இளந்தளிர்கள் இடைவிடாமல் இரத்தம் சொட்ட
எக்காளம் போடுகிறான் எனை மறந்து ஆடுகிறான்.
பலநூறு ஆண்டா மற்றவர் பாதம்பட வைத்திருந்தான்
பகுத்தறிவுப் பண்புடனே இவன் பலகாலம் வாழமாட்டான் -அதனால்
வாழ்ந்தது போதும்! போதும்!! அந்நியர் வதைவலைக்குள் வருமுன்னே
இடிவிழட்டும் என் தலையில் இயற்கை தன்னுள் எனை மறைக்க.
-பொன்பரப்பியான்
|