........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 212

தமிழ் வளர்க்கலாம் வாங்க...!

வள்ளுவனை எடை போட்டோம்,
கம்பருக்கு சடை போட்டோம்
தெள்ளிய தொல்காப்பியத்தையும்
கிள்ளிப் பார்த்தோம்
அகநானூறும் புறநானூறும்
அவிழ்த்து முடிந்து ஆராய்ந்தோம்
அவ்வை அலசினோம் அவையில் விவாதித்தோம்
இலக்கணமும் இலக்கியமும்
வழக்கினிலே வரும்போது
கணிணியும் நாமும் செய்யும்
தற்செயல் தவறுகளை
பதிப்பித்தே வாக்குவாதம் வளர்க்கிறதே...

யாருக்கும் எண்ணமில்லை! தமிழின் தரம் குறைக்க!!
தமிழ்வளர்க்க ஆர்வம் கொண்டே,
அதன் தரம் ஆராய்ந்தோம்
கொட்டை வடி நீர் கேட்டால்
துவண்டு போய் விழிக்கின்றோம்...
காப்பி வேண்டுமென்றே என்றுறைத்தால்
அளித்தே மகிழுகின்றோம்
தமிழென்ன கலப்பினமா, தனித்திருக்கும் தவமணியா
இனித் திருத்த அதிலென்ன ஏற்கெனவே குறைபாடா
இருக்கும் தமிழ் நற்தமிழே! சந்தேகம் நமக்கு வேண்டாம்!!

திருத்துகிறோம் என்று அதன் தரம் குறைக்கவேண்டாம்
தமிழ்வளர்க்க நாமொன்றும் செய்யவேண்டாம்
நமைவளர்க்க தமிழொன்று போதும்!
ஆரியமோ, திராவிடமோ
ஆதி தமிழுக்கு பேதமில்லை
நமக்குள்ளும் பேதமில்லை...
சொல்வழக்கில் பழகு தமிழ்
வளருமிங்கே புறிந்தோமில்லை
புறிந்து கொண்ட அழகுத்தாய்
தமிழ்தானே ஏது எல்லை?

அழைக்கின்ற கிள்ளை மொழி
அவளுக்கோ மழலைதானே
அன்போடு ஓடிவந்து தன் மடியில் தானிட்டு
நம் மேலே தலைப்பிட்டு அமுதம் தந்திடுவாள்
அன்னையவள் கருணை கொண்டு
பிறகென்ன பெருங்கவலை?
தமிழ் வளர்க்க
இன்னொருவர் வரவேயில்லை!
தமிழழிக்க இங்கொருவர் பிறக்கவில்லை...!!

இத்தனை கோடி மாந்தர்களைப்
பெற்றெடுத்து பேணிக்காத்து,
அன்போடு அரவணைத்து
அற்புதமாய் தன்னையும் தானே காத்து
வளர்க்கும் தாந்தோன்றித் தமிழன்றோ!
தலைசிறந்த மொழியன்றோ!
ஆகையினால் தாயாய் நின்று..
நமை வளர்க்கும் தமிழ் தானே!!

ஆதவனின் பாதை தன்னை அறுதியிட ஆருண்டு
யாதுமாகி நின்ற தமிழ்!
எங்கும் நிறைந்த தமிழ்!!
தானாய் வழி நடக்கும் தரணியே தலை நிமிரும்
தமிழை வழிநடத்த நமக்கிங்கே தகுதியில்லை...
மொழியொன்று எப்போதும் புறிந்து கொள்ள!
அடுத்தவரின் மனதிருப்பை அறிந்து கொள்ள!!
பக்குவமாய் இதை உணர்ந்து மனிதம் காப்போம்!!!

நம்மில் ஒரு பகுதி தமிழில்லை...
தமிழின் சிறு துகள்தான் நாமன்றோ
தமிழ்வளர்க்க நாமொன்றும் செய்யவேண்டாம்
நமைவளர்க்க தமிழொன்று போதும்!
இருக்கும் தமிழ் கற்றிடவே நமக்கிங்கே
போதாது இருக்கும் ஆயுள்!
பாமரர்க்கும் புரிவதற்கு செய்வோம் செய்யுள்!!

-தமிழ்த்தேனீ, சென்னை.
 

 
m

 

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.