........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 233

இரவே விடியாதே...

 

நிலவில் மூழ்கி
நிலத்தில் பிறந்து
ஒளியைச் சிந்தும்
ஒய்யாரப் பெண்ணே

விழியால் வீழ்த்தும்
கலையைக் கற்றவளே
மொழியில் மவுனத்தை
கலந்து மொழிபவளே

எழில் கொஞ்சும் என் பூஞ்சரமே
நிழல் தருவே பொன்மேனியாளே
பனிமழையில் பூத்தெழுந்து
குளிர்விக்கும் விந்தைச் சுடரே

உன்னை
கண்ணில் கண்டாலும்
உள்ளத்தில் நினைத்தாலும் - என்
நரம்பின் அணுக்களும்
குறும்பு செய்யத் துடிக்குதே...

அரும்பின் அரும்பே
அழகின் அழகே
நிலவின் நிலவே - நீ
ஊடல் செய்வாய்
செவ்விளத் தோளாய்
செம்பவழ இதழாய் - நீ
ஊடல் செய்வாய்
என்
ஆழ் நெஞ்சின்
ஆசை இதுதான்
பேசுங்கிளியே - நீ
பேசாது ஊடல் செய்வாய்...

இரவே - நீ
விரைந்து விரைந்து ஓடாதே
கயிறு கொண்டு கட்டி - உன்னை
நெடு நேரம் நிற்க வைக்கட்டுமா
இரவே இரவே நீ போகாதே

இனியாள்
இடைத்தொட்டு
கனிவாய்க் கனிவாய்
கன்னந்தொட்டு
பனியாய்ப் பனியாய்
வயிற்றில் விரல் வரைந்து
தொடையில் இதழால் ஊர்ந்து
தொகையாய் தோள் தடவி
வளைச்சங்காம் கழுத்தில் இறங்கி
வளம் நிறை மார்பில் ஊர்ந்து
வயிற்றினில் பல முத்தம் தந்து - அவள்
வெப்பத்தை நான் உள்வாங்கி
தப்பாமல் ஊடலை
தணிக்க வேண்டும்
அதனால் இரவே விடியாதே...

- ஆர்.கனகராஜ்.

 

 

 

 

 

 

m

 

ஆர்.கனகராஜ் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.