........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:26

புதிதாய் இங்கே பிறந்தாய் நன்றே!

சலங்கையொலி குலுங்கியொரு
சந்தம் தனை யெழுப்பி யிங்கே
சிறந்தமொழி தழைக்கும் வழி
சித்திரைத் தமிழ்ப்பாவை வந்தாள்

விதைத்த விதை வளரும் வகை
விதித்த விதி என்றோர் முறை
விடியும் பொழுதில் வடிக்கும் கவிதை
வரையும் ஓவியம் புதிய பாத்திரம்

புதியதல்ல பொங்கும் முத்தமிழ்
எளியதல்ல புரிந்திட இத்தமிழ்
இன்பம் பொங்கிடும் புதுத்தமிழ் ?
சித்திரை ஈன்ற பெரும் நற்றமிழ்

கடந்தகால கவலைகள் சென்றிடவும்
நிகழும் காலத்தில் புவி வென்றிடவும்
வந்திடுங் காலந்தனில் நின்றிடவும்
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் தந்திடவும்

தென்றலாய் மிதந்து நதியாய்த் தவழ்ந்து
தொன்மை மொழியாய் மிளிரும் தமிழே - நீ
புதிதாய் இங்கே பிறந்தாய் நன்றே
புரளும் உலகை புதுப்பிக்கத் தானோ ?

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 

 

 

 

 

 

m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.