........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:31

கருவறை

விழிமடலை வீசி
காதலை வளர்த்தாய்
உணர்வுகளைத் தூண்டி
உள்ளத்தை வளைத்தாய்
நெஞ்சோடு கலந்து
இதயத்தை எடுத்தாய்
உயிரோடு கலந்தாய்
உன் நினைவுகள்
என்னையே பட்டம் போல்
சுற்றுகின்றது...

மறக்க முடியாத அவளின்
நினைவுகளை சுமக்கின்ற
என் மனமும் கருவறைதான்

அறியாத பருவத்தில்
தெரியாமல் வளர்ந்த இக்காதல்
களங்கப்படுத்துவதற்கல்ல
உன்னால் என்னை மறக்க
இயலாத போது என்னால்
மட்டும் உன்னை
மறக்க இயலுமோ?

மௌனத்தால் நான்
மறைத்த என்
மனபாரங்கள் என்
மனதை வெல்ல முடியாமல்
தவிக்கின்றது ... அந்த
வலியிலும் ஓர் சுகத்தை
அறிகின்றது என் மனம்.

மனம் எனும்
மாயையில் மௌனமாய்
சுற்றுகின்றது உனது நினைவுகள்
என்னுள் புதைந்திருக்கும்
உன் நினைவுகள்
காதல் கருவறையாய்
என்றென்றும் மலரட்டும்.

-த.சத்யா,  இராஜபாளையம்.

 

 

 

 

m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.