........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 318

கன்னியின் சோக‌ம்

 

ஏழைப் பெண்ணே
எப்போதும் உன்னைக்
கைவிட மாட்டேன் என்றவனே
இன்று
பணக்காரியொருத்தியின்
பாதம் பிடித்து நிற்பதேன்...?

நகைநட்டு பணம்காசு
எதுவும் வேண்டாம்
உன் புன்னகை போதும் என்றவனே
இன்று
பகட்டான முந்தானைக்குள்
முடங்கிப் போனதேன்...?

இளம் பெண்ணே
என் இதயத்தில்
எப்போதும் நீதான் என்றவனே
இன்று
உன் இதய அரங்கில்
பணக்காரத் தோரணம் கட்டி
பாவை ஒருத்திக்கு
வெஞ்சாமரம் வீசுவதேன்...?

மைதீர்ந்து விட்டது என
என் இதழ்
தொட்டு எழுதி
உன் இமைதான் என் சிறை என்றவனே
இன்று
அவள் பணத்திற்காக
அவள் ஏவலுக்குக்
கீழ்படியும் கைதியாகிப் போனதேன்...?

அதிகாலைப் பொழுதில்
என் குடிசை வாசலில்
நீர்த் தெளிக்கும் போது
என்கரம் பட்டுத் தெரிந்த
நீர்த்திவலைகளுக்கு
முத்தம் தந்து சென்றவனே
இன்று
மாளிகை வாசலில்
சாணம் தெளிக்கும்
கூலிக்காரனைப் போல்
அவளிடத்தில்
கூனிக் குறுகி நிற்பதேன்?

ஆண்மகனே
ஆசையில் வீழ்ந்தாயோ
அல்லது
உன் ஆசையே இதுதானோ...
இன்று
நான் தேடுகிறேன் தேடுகிறேன்
என் தேடலில்
விடை கிடைக்கவில்லை...
ஆனாலும்
கன்னி என் சோகம்
கண்ணீரால் எழுதப்படும்...
காவியமாக... ... ...

-ஆர்.கனகராஜ்.

 

 

 

 

 

 

m

 

ஆர்.கனகராஜ் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.