........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 319

சொல்ல முடியாமல்...

 

உன்னை பார்க்கும் போதெல்லாம்
காதலை சொல்லத் துடிக்கும்
என் உதடுகள்
உன்னை பார்த்தவுடன்
சொல்ல மறுத்தன

கனவுகளில் ஆயிரமாயிரம்
காதல் மொழிகளை பேசும்
நான் நிஜத்தில்
உன் முன்
பேச முடியாமல் தவித்தேன்

உன்னிடம் சொல்லவும் முடியாமல் உன்னிடம் பேசவும் முடியாமல்
இருக்கும் என்னால்
இந்த காதலின்
வலியை தாங்க முடியவில்லை

அன்பே
உன்னிடம் என் காதலை
எப்படியும்
சொல்லிட வேண்டும்
என்கிற திடத்துடன்
நெருங்கி வந்தேன்

ஆனால்,
நீ உன் காதலை
வேறொருவரிடம்
சொல்லும்போது கேட்டேன்
அப்படியே
என் காதலை
என்னுள்ளே
புதைத்துக் கொண்டு...

உங்கள் காதல் வாழ...
நீங்கள் நலமாய் வாழ..
வாழ்த்த நினைக்கிறேன்...
ஆனால்
இப்போதும் சொல்லாமல்
சொல்ல முடியாமல்...

 -த.சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.