........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 324

நானும் கா...லி

 

பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும்
உன் முகத்தை..!
கேட்டுக் கொண்டே
இருக்க வேண்டும்
உன் பேச்சை..!
ரசித்துக் கொண்டே
இருக்க வேண்டும்
நீ பேசும் தமிழை..!
நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும்
உன் உருவத்தை..!
சுவாசித்துக் கொண்டே
இருக்க வேண்டும்
நீ விடும் மூச்சை..!
இப்படி காதல் எதுவும்
செய்யும்...
இதற்கு உன்
புன்னகையே சாட்சி!

பெண்ணே...
முதலில்
என்னைக் கவிஞனாய்
மாற்றினாய்...
மகிழ்ந்தேன்..!
இடையில்
என்னைக் கைவிட்டு
ஏமாளியாக்கினாய்...
ஏமாந்தேன்..!
கடைசியில்
உன்னை நினைத்து
நினைத்தே உயிர் விடத்
தீர்மானித்தேன்..!

விஷப் பாட்டில்
முழுவதும் காலி...
நானும் கா....லி...கா...லி...!

-த.சத்யா, இராஜபாளையம். 

 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.