........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 325

சிந்திக்கிறேன்.

 

தன் தகுதியைத் தரமுயர்த்தச் சிலர்
தவறுவது ஏனென்று சிந்திக்கிறேன்.
வீண் தமிழென்று எண்ணிச் சிலர்
ஏன் தமிழை ஒதுக்குகிறார்.
புன்னகையிதழ்கள் சில இறுகி
மென்னகை காய்ந்தது ஏன்?
புத்தகமொரு பூச்சியெனச் சிலர்
பத்தடி ஓடுவதேன் சிந்திக்கிறேன்!!

முளைவிடுவோரைத் தூரத் தள்ளி
முகம் கோணுவோரை நிதமும்,
அகத்திலன்பு காய்ந்து அறவே
சுகம் விசாரிக்காதோரையும்,
கடமையை மறந்து நழுவுவோரை,
கரிசனையற்று நேரம் புறக்கணிப்போரை,
கடும் கோபம் கொள்வோரின்
கடும் மனவோட்டத்தைச் சிந்திக்கிறேன்!!

கருணை வழியும் வதனத்தை,
கடும் வார்த்தை தவிர்ப்போரை,
கனிமொழி பேசுவோர் மனதைக்
கரிசனமாய் மகிழ்ந்து சிந்திக்கிறேன்.
கடினமற்ற அவ்வினிய பாதையைக்
கடைப்பிடிக்கும் வழியைக் காணுங்களெனக்
கருத்தாய்ச் சிந்திக்கிறேன்!
கவனமாய்ச் சிந்திக்கிறேன்!!

-வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க். 

 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.