........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 326

குறிப்பெழுதுங்க‌ள்...!

 

தேன் பருகித்
தாவிவிடும் வண்டதின்
இயல்பு விளங்காமல்
வினவும் பதினாரு வயது
பருவப்பூவிற்கு
நினைவடுக்குகளில் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சிதறிக்கிடக்கும்
வாழ்க்கைப் பாடங்க‌ளைக்
கோர்வையாய் சேர்த்துப்
ப‌ழ‌கிடாத நிலையில்
விளக்கிச் சொல்லுவது
எப்படியெனும் போதும்...

கட்டில் அடங்காத மனக்குரங்கை
அதன் போக்கில் விட்டு,
இன்றைய பொழுது
நம்பொழுது,
நாளையென்பது
பகல் கனவென்று,
காரணம் சொல்லி
சிற்றின்பங்களைக் கணக்கெடுக்கும்
இளந்தளிர்களுக்கு
வாழ்க்கையென்பது என்னவென்று
விளக்கிச் சொல்லுவது
எப்படியெனும் போதும்...

இப்படி
பல்வேறு தருணங்களில்
கடந்து வந்த பாதைகளில்
கடந்து போன பாடங்களை
மீண்டும் படிக்க நேர்கையில்
தோன்றுகிற‌து,
ந‌ம் வாழ்க்கையைக்
குறிப்பெழுதியிருக்க‌லாமென்று..!

- ராம்ப்ரசாத். 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.