........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:34

வயோதிகத் தாயின் கனவு

வயதான காலத்திலே
வயோதிகர் இல்லத்திலே
வரிசையில் நான் பார்த்தபடி
வாய்க்குணவு கிடைக்குமென்று

பெற்ற முத்துக்கள் மூன்றும்
பெருவாழ்வு கண்டு வாழ்வதோ
பேர்பெற்ற மேலைநாட்டில்
பேரன் பேத்தியைக் கண்டதில்லை
பேதையிவள் வாழ்க்கையோ
முதியோர்கள் இல்லத்திலே

மூத்த பிள்ளை பிறந்தபோது
முகமெங்கும் பரவசமாய்
முன்னோடி வந்த கணவன்
வயதான காலத்தில்
வைத்தெம்மைக் காப்பதற்கு
வந்து பிறந்தான் எம் மகன்
என்றவர் இன்றில்லை

மூத்தவனோ மூழ்கியொரு
காதலிலே
முத்தமிழைத் துறந்து
ஆங்கிலத்தில் ஜக்கியமே

அடுத்து பிள்ளையாய் வந்தவளோ
அழகினிலே சிற்பம் போல்
ஆஸ்திக்கொருவளென ஆனந்தம் கொண்டோம்
ஆஸ்தியோடு புகுந்தவள் தான்
பிறந்த வீட்டை மறந்து விட்டாள்

கடைசியாப் பிறந்தவன்
கனவாக மறைந்தானோ
காற்றினிலேயேறி அவன்
கனடாவை அடைந்தானோ
முதியோர் இல்லக் கதவுதனை
மூடி விட்டுத்தான் அவனும்
தாய்நாட்டைப் பிரிந்து விட்டான்

நாட்களை எண்ணிக் கொண்டு
நாயொன்றின் துணை கொண்டு
நானின்று வாழுகின்றேன்
நோயற்று என் செல்வங்கள்
நிறைவாக வாழ்ந்தாலே
நிம்மதியாய் கண் மூடுவேன்

இது ஒரு தாய் !
இப்படி எத்தனை தாய் தந்தையர்
இதயத்தில் பாசத்தைச் சுமந்து விட்டு
இப்போது ஏக்கத்தின் நிழலில்
எதையோ தேடிக் கொண்டே ....

 -சக்தி சக்திதாசன், லண்டன்.

 

 

m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.