........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 361

2009 ஆண்டின் குமுறல்...!

காலத்தின் வாரிசு கலங்குகிறேன்
கடந்து வந்த தமிழர் நிலம் பார்த்து.

வீரம் விளைந்த மண் என்பர்- ச்சீ... ச்சீ...
வீணர்களின் இடம் இதுதான் என்பேன்.

வள்ளுவர் வாழ்ந்த நாடாம்-இல்ல
அடிவருடிகள் செழிக்கும் நாடு.

பெயார் பிறந்த நாடாம்-ஆனால்
பேடிகளின் ஊலை கேட்டேன்.

தொப்புள்கொடி குண்டில் சிதற-இங்கு
துளிக்கூட அதிர்வு இல்லை.

உடலுருப்பு உடைந்து தெறிக்க-இங்கு
உலகம் சிக்க நடிக்கப் பார்த்தேன்.

பிணப்புணர்வு என்று கேட்டும்-இங்கு
பிறக்கவில்லை இன உணர்வு.

இனியமொழி தமிழ் என்பர்-ஆனால்
இது ஏமாற்றுக்காரனின் இன்பவழி.

சங்கம் வளர்த்த மொழியாம்-பாவம்
சகுனிகளின் பிழைப்பு மொழி.

இனமொழி ஏற்றமில்லை-இங்கு
எவனிடமும் மானமில்லை.

அழிக்கும் சக்தி எனக்கில்லை-இருந்தால்
அழித்திருப்பேன் தமிழகத்தை.

உணர்த்துகிறேன் நான் உள்ளளவும்-உலகில்
உணர்வில்லாதவன் தமிழக தமிழனென்று.

அடுத்து வரும் என் வாசு-உணர்வை
அளித்து இயக்கும் பெரும் மனசு.

ஈனபுத்தி தமிழன் மாற-அடுத்து
இயற்கை அனுப்பும் பெரும் பரிசு!

-பொன்பரப்பியான்.

 

 

 

 

 

 

m

 

பொன்பரப்பியான் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.