........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 363

உறவுகள் என்பது..!

சேயாய் மனிதன் உறவினை
தாயின் மார்புத் தொடர்பினால்
மாய மோகன முறுவலால்
ஓயாத அணைப்பால் அடைகிறான்.
தேயாத பெற்றவர் உறவால்
தரமாய்த் தகுதியாய் உலவுகிறான்.

நன்மை, நேர்மை, நற்பண்புகள்
இன்ப உறவின் திறவுகோல்கள்.
ஆபத்தில் தள்ளல், அந்தரமாக்கல்,
ஆறுதலளித்து அணைப்பதும் உறவுகள்.
உறவுகளின் முறையான அமைவு
வாழ்விற்கு வளமான செழிப்பு.

ஊரிற்கு மனிதன், நாரிற்குப் பூ,
ஏருக்கு வயல், தூரிற்கு மரம்,
பூவிற்கு மணம், ஆவிற்குப் புல்,
பாவிற்குச் சந்தம், நாவிற்குத் தமிழென,
மேவும் சிரஞ்சீவியாய்க் காலகாலமாய்
கவினுறு சீவிதப் பயன் உறவுகள்.

உறவுகளின் இணைப்பு பெரும்
ஊட்டம் நிறை களிப்பு.
நறவு மிகு நம்பிக்கையாம்
சிறந்த நங்கூரப் பிடிப்பு.
சிறகுகளாக வாழ்கை வானில்
தோன்றும் ஒரு மிதப்பு.

தேன்தமிழோடு தமிழன் உறவு
வீண் தமிழென்று விலக்கல் உமிழ்வு.
துறவென்று உறவுகளை
அறுப்பதொரு வெளி நடப்பு.
உறவுகள் இறைவனோடென்பது
துறவு வாழ்வுப் பிணைப்பு...!

-வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.