........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 369

பக்தி!

பக்தி என்ற போர்வையிலே
தன்னை வளர்க்கிறான்-இவனே
உத்தமன் உயர்வுதனை
ஊழ் என்கிறான்.

பக்தி என்ற வாளை வீசி
பயமுறுத்துகிறான்-இவனே
ஒத்து வாழும் கூட்டம் பார்த்து
உளம் குமுறுகிறான்.

பக்தி பக்தி என்று கத்தி
பணம் சமைக்கிறான்-இவனே
பகுத்தறிவோர் செயல் பார்த்து
பதுங்கி விழிக்கிறான்.

முக்தி என்று சொல்லிச் சொல்லி
முணுமுணுக்கிறான்-இவனே
முந்துவோன் செயல் பார்த்து
முகம் சுளிக்கிறான்.

எத்தனாய் வாழ்ந்து வரும்
இவனைப் பாருங்கோ-இனிமேல்
இவனை நீக்கி ஏற்றம் பெற
இணைந்து வாழுங்கோ.

-பொன்பரப்பியான்.
 

 

 

 

 

 

m

 

பொன்பரப்பியான் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.