........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 376

த‌ன்னைத்தானே விர‌ட்டி...

.

மண்ணை ஆராய்ந்து
பொன்னை விளைவிக்கும்
வித்தை கற்ற
பாடங்களை மறந்து
வெறும் காகிதச்செடிகளை
க‌ணிப்பொறிக‌ளில்
நட்டு வைப்பதே
புதுமை என்றாகிவிட்ட பிறகு
காகித வண்ணங்களில்
வேறுபாட்டையும்
எண்ணங்களில்
குறைபாட்டையும்
தவிர்க்கமுடியவில்லை...

முன்னேற்ற படிகள்தான்
என்று குதூகலிக்கின்றனர்
ஏறுவது குழிக்குள்தான்
என்பதை அறியாமல்...

விரைவாக விரையும்
இரு ரயில்களில்
முந்திச் செல்வது
எது என்கிற முனைப்பில்
கவனிப்பின்றி கடந்து போகும்
சின்ன சின்ன
சந்தோஷங்களைக்கூட‌
நாளைக்கென்று
ஒத்திப்போடுகின்றனர்
இன்றைய பொழுது
சேமிக்கவாம்...

வெட்டியாய் பொழுதைக்
கழிக்க வேண்டாமென்று
வீட்டுக்கடன் வட்டிக்காய்
கழிகிறது பொழுதுகள்...

பத்துவருடங்கள் கழித்து
கிடைக்கும் ப‌த்து ல‌க‌ர‌
நிக‌ர‌ லாப‌மென்று பத்தாயிரம்
க‌ண‌க்குக‌ள் போட்டு
ப‌தினூரு கையொப்ப‌மிட்டு
மிக‌க்க‌வ‌ன‌மாய் ஒரு ப‌ந்த‌ம்
வாழ்நாள் நிர்ப‌ந்த‌மாய்...
நில்லாம‌ல் ஓடும் ஓட்ட‌த்தில்
த‌ன்னைத்தானே விர‌ட்டி
ஓடும் விந்தை ம‌னித‌ர்க‌ள்
இவ‌ர்க‌ள்...!

-ராம்ப்ரசாத்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.