........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 377

மதமா? மனிதமா?

.

ஒரே மனிதரில்
மதம் தான் எத்தனை?
உனக்கே தெரியாத
உலகெங்கும் நுண்ணுயிராய்-மதம்...!
யார் வகுத்தது?
இந்த மதத்தை...
துடிப்பது உன் இதயம் தான்.
ஏன் துடிக்க வைக்கிறாய்
மற்றொரு இதயத்தை...
உன்னிடத்தில் இருப்பது தானோ
என்னிடத்தில்...
வேறொன்னும் இல்லையே!
நம் உயிரைத் தவிர...

ஒற்றை உலகத்தை
உடைக்கும் சக்தியை...
ஏன் முடியாது!
ஒன்று சேர்க்க...
நிறங்கள் வேறாயினும்-அது
ஒன்றுடன் ஒன்று
சேர்ந்தே தோன்றும்... மற்றொன்று!
மற்றவர்களை
மகிழ்விப்பதற்காக...!

மனிதனால்
உருவாக்கிய-மதம்
மனிதனை அழிக்கிறது
மனிதம் என்ற தத்துவத்தில்
வாழ்ந்து பழகு-வாழ்க்கை
வளர்ச்சி பாதையிலே...
பறக்கும் பறவைகளில்
உருவம் வேறுபட்டாலும்
அன்பு என்னும்
அகண்ட வானிலே...
அனைவரும் சமமே!
அன்பு அனைவரையும்
அரவணைக்கும்
வாழ்வது அன்பாகட்டும்
வளர்ப்பது
மனிதமாகட்டும்...

-மு.சந்திரசேகர்.
 

 

 

 

 

 

m

 

மு.சந்திரசேகர் அவர்களின் மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.