........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 380

கடவுளைத் தேடி...

கை எட்டும்
தூரத்தில்
கண் தெரியாத
பிச்சைக்காரன்..
கண்டும் காணாது
காற்றாய்க்
கடந்து சென்றான்
கடவுளுக்கு
காணிக்கை படைக்க
கோவிலுக்கு..!

____________________

உன்னைக் கேட்காமலே
இறைவா
உன்னோடு நான்
பேசிக் கொண்டே இருக்கிறேன்
அது
உனக்கும் கேட்பதில்லை
எனக்கும் வெறுப்பதில்லை..!

____________________

மனம் விட்டு அழுது
மனப் பாரம் இறக்க
மறைவிடம் தேவை..
புனித வீடாம்
உன் கோவிலில்,
இறைவா
என்
கண்ணீர்ப் பூக்கள்..!

-பாளை.சுசி.
 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.