........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 383

பொங்கல் வாழ்த்துக்கள்....

பொங்கல் திருநாளாம் இந்நாளில்
பொய்ம்மை மறையும் நன்நாளில்
பொங்கல் வாழ்த்துதனை நானும்
பொறாமையின்றி கூறிட விழைகிறேன்!

நாட்டில் உள்ளோர் அனைவரும்
நாணயமான வாழ்வுதனை நடத்தட்டும்
நல்லோரும் வல்லோரும் இணைந்து
நானில புத்துலகை அமைக்கட்டும்!

உலகில் வாழும் தமிழரெல்லாம்
உயர்ந்த வாழ்வு நடத்தட்டும்
உரிமைக்குரலை நாளும் ஒலித்திடவே
உண்மையாக யாவரும் உழைக்கட்டும்!

தைமகள் வருகையை எல்லோரும்
தவறாமல் எதிர்க்கொண்டு நோக்கட்டும்
தமிழரின் தன்மானம் உலகில்
தனித்தன்மை யோடு திகழட்டும்!

தைத்திங்கள் முதல்நாள் பிறக்கட்டும்
தரணிவாழ் தமிழர்கள் சிறக்கட்டும்
பொங்கல் விழாவதுவும் மலரட்டும்
பொதுமைக் கருத்துக்கள் உலாவரட்டும்!

எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கட்டும்
என்றென்றும் உலகமக்கள் யாவரும்
எல்லா வளமும் பெற்றிட்டே
ஏற்புடனே திகழ்ந்து மகிழட்டும்!

-கவி.செங்குட்டுவன், ஊத்தங்கரை.
 

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.