........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 384

ஊமையாக்கியது யார்?

தொலைபேசியை வைத்த கண்
வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்
நீ அழைக்க போகும்
அந்த நிமிடத்திற்காக...

உன்னிடம் பேசப்போகும்
வார்த்தைகளை பரிட்சை
எழுதும் மாணவனைப்போல
இரவு முழுவதும்
பேசிக் கொண்டிருந்தேன்
கற்பனையில் என் மனதோடு
எப்பொழுது இந்த இரவு
விடியும் என்று
எனக்குள்ளே ஏக்கம்
இந்த இரவு
ஒரு மணி நேரத்தில்
விடிந்துவிடாதா என்று
என்னை அறியாமல்
இரவின் மீது கோபம் கொண்டேன்
ஏக்கத்துடன்
கனவில் உன்னை சுமந்து கொண்டு
உறங்கி விட்டேன் நான்...!

தொலைபேசி அழைத்தது
என் காதலை சொல்லிவிட
கையில் ரிசிவரை எடுத்தேன்
உன் ஹலோ
என்ற வார்த்தையில்
நான் எதுவுமே
பேச முடியாமல் ஊமையாகிவிட்டேன்.

-த. சத்யா, இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.