........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 389

தேர்தல் வருமா?

அரங்கேறும் அவலங்கள்!
தேர்தல் நெருங்கிட
தீயாய் பயணங்கள்!
ஓலை குடிசையில்
ஒடுங்கி கிடக்கும் பாமரனுக்கெல்லாம்
பன்னீர் அபிஷேகங்கள் !
பசித்த வயிற்றுக்கெல்லாம்
பால் வார்க்கும் தருணங்கள்!
வகை வகையாய் வாக்குறுதி!
வஞ்சனையாய் பல பொய்கள் !
வாக்குகளுக்கு ரொக்க பணம்
வழங்கியே பெறுவார் வெற்றி !
வென்ற பின் சென்றவர்
வருவார் மறு தேர்தலுக்கு வாய்ப்பிருந்தால்!
விண்ணைத் தொடும் விலைவாசியில்
கூடி வருமா இன்னும் கொஞ்சம்? -என்று
வாக்கை விற்ற பாமரன்
வரும் தேர்தலை நோக்கி
காத்திருப்பான்...!

- "ராம்கோ" மாரிமுத்து.

 

 

 

 

 

m

 

"ராம்கோ" மாரிமுத்து அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.