........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 396

தீபம்

ஊற்றிடும் நெய்தனை
உணவெனக் கொண்டொளி
கூட்டிடும் வண்ண தீபம்! - ஞான
ஊற்றிடும் நெய்யுண்(டு)
உற்றதை உணர்ந்ததை
ஏட்டி(ல்)செய்யும் எண்ண தீபம்!

அகலொடும் மாவொடும்
ஐமுக விளக்கொடும்
ஆடிடும் அழகு தீபம் - நாளும்
அகமொடும் அறிவொடும்
அனுபவத் திரியொடும்
ஆடிடும் அன்பு தீபம்!

சூழ்ந்திடும் இருளினை
சுந்தர ஒளியினால்
துடைத்திடும் எரியும் தீபம் - தன்னை
சூழ்ச்சியால் வீழ்த்திடத்
துடிப்பவர் நாணிட
துளிர்த்தெழும் அறிவு தீபம்!

திரியிலே ஆடிடும்
தேகயெழில் காட்டிடும்
விட்டிலை விழுங்கும் தீபம் - எண்ணப்
பரிசலில் ஆடிடும்
பாழ்செயல் தூண்டிடும்
பண்பில்லார் ஆசை தீபம்!

உயிரோ(டு) உணவுமாய்
உற்றநல் மெழுகதன்
உருவழித் தாடும் தீபம் - பாரில்
உயர்வான உறவினை
புகழோடு பொருளினை
உதிர்த்தோடும் கோப தீபம்!

கடவுளை கைதொழச்
செய்திடும் நம்தமைக்
கற்பூரம் கொண்ட தீபம் - நல்ல
நடத்தையால் சிறந்தாரை
நாளெலாம் தொழுதிடும்
நல்லார்தம் உள்ள தீபம்!

-அகரம்.அமுதா.

 

 

 

 

 

m

 

அகரம் அமுதா அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.