........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 397

கவிதைகள்.

பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகள்
தனிக்குடித்தனம் நடத்தும்
மண்ணின் மைந்தர்கள்
தீவுகள்

__________________

கிறிஸ்துமஸ்
தேவாலபூங்களின் திருவிழா !
கர்த்தருக்கு எடுக்கும்
அர்த்தமுள்ள விழா!
மகிமைக்குச் மகுடம் சூட்டும் விழா !

__________________
இயேசு
நிலுவையில் உள்ள பாவங்களைச்
சிலுவையில்' சுமந்த (சுமக்கும்)
செம்மல்!

__________________

இயேசு சிசுவைச் சுமக்கும்
தாய் போல் சிலுவை சுமக்கும்
தந்தை........!
மரியாள் வயிற்றில் பிறந்தமரியாதை'!

__________________

விலைமகள்
குடலை நிரப்ப
உடலை விற்கிறாள்!

__________________

கடற்கரை காதலர்களின்
தேசிய உணவு'
சுண்டல்

__________________

தங்கம்
தங்கத்தின் விலை ஏறியதால்
தங்கத்திற்கு தாலி'ஏறவில்லை!

-முனைவர். தியாகராஜன், சிங்கப்பூர்.

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.