........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 398

நாண்...

நல்ல தமிழ்! நல்ல இலக்கணம்!
நல்ல அறிவு! நல்ல அனுபவம்!
நல்ல தகுதி! நல்ல ஆய்வு!
நனைத்து நடும் நற்றமிழ் நடவு,
நல்ல கவிதை விளைச்சல் கனவு.
நல்ல நம்பிக்கை உயர்த்தும் தரவு.

நற்றமிழ் நடவு கிறுக்கல் அல்ல.
நற்றமிழ் இலக்கணப் பொறுக்கல் அல்ல.
நானே திருத்தி நானே பொருத்தும்
நாணே - தமிழைத் திரிக்கும் நூல்!
ஏனோ நூலை அலைத்துக் குலைத்து
வானில் பட்டம் உயராது தடுக்கிறாய்!

அருவக் காற்றே! நீ சாற்றிடு!
அருமைக் கவி இலக்கியம் கற்றாயா!
சுகந்தம் விரித்துச் சுத்தம் செய்கிறாய்!
மகரந்தம் பரப்பி இனம் பெருக்குகிறாய்!
சுந்தரக் கவிப் பட்டம் நான் ஏற்றுவதாய்
சுகவாழ்வுச் சமூகப்பணி நீ செய்திடுவாய்!

-வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.