........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 399

தூக்கம்...!

இயற்கை தரும் ஓய்வு
தானாய் உண்டாகும் நிகழ்வு
தன்னை மறந்தாலும் மகிழ்வு
விண்ணைத் தொடும் நிறைவு
அதிலும் உண்டு சின்னத்திரை
நம் எண்ணத்தின் எதிரொலி(ளி)
நேரம் குறைவானாலும் நிம்மதி உண்டு
அதிகம் உறவாடினாலும் தவறு

தானே வந்து தழுவுவாள்
உறவாடினதற்கு சாட்சியில்லை
வந்தால் மயக்கம்
சென்றால் உற்சாகம்
களைப்பைப் போக்கினால் சுகம்
பிழைப்பைக் கெடுத்தால் பங்கம்

கண்மலர் மூடும் நேரம்
மனமலர் விரியும் நேரம்
புதிராய் நிகழ்வுகள் வரும் நேரம்
சதிராடும் ஆசைகள் தோன்றும் நேரம்
களைப்பின் விளைவால் வரும்
நல்ல தெளிவைத் தந்து போகும்...

-சா.துவாரகை வாசன்.
 

 

 

 

 

 

m

 

சா.துவாரகை வாசன் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.