........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 400

நினைவுச்சுமைகள்..!

மொட்டை மாடி செல்லும்
படிக் கட்டுகளில்
உன் பாதப் படிமங்கள்...!

வீட்டைச் சுற்றிலும்
உன் சுவாசக் காற்று...!

பழைய பாடப் புத்தகத்தில்
பத்திரமாய் நீ பாதுகாத்த
மயில் இறகு...!

அன்றாடம் எழுதி
அப்பியாசம் செய்த
அரைகுயர் நோட்டில்
அழகழகான உன்
கையெழுத்து...!

விட்டுச் சென்ற
கைக்குட்டையில்
நீ ஒற்றி எடுத்த
மஞ்சள் வண்ணம்...!

முகம் பார்க்கும்
கண்ணாடியில்
நீ ஒட்டி வைத்த
ஸ்டிக்கர் பொட்டு...!

நித்தமும் நீர் விட்டு
நீ வளர்த்த
முல்லைக் கொடியின்
நறு மணம்...!

வேப்ப மரத்திலிருந்து
விழுதாய்த் தொங்கும்
கயிற்று ஊஞ்சல்...!

கொல்லைப் புறத்து
கிணற்று நீரில்
உன் குளிர் முகம்...!

குளியலறை
ஈரக் காற்றில்
உன் இனிய கீதம்...!

இவை அனைத்தும்
புகுந்த வீடு சென்ற
உன்னைப்
பிறந்த வீட்டில்
ஞாபகப்படுத்தும்
நினைவுச் சுமைகள்...!

-பாளை.சுசி.
 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.