........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 404

உயிரிலே கலந்தவள்...

‌நமக்கிடையே நடக்கும்
ஊடல்களின் முடிவில்
பேசாதே என்று
என் உதடுகள்
உன்னிடம்
சொல்லி இருந்தாலும்
மௌனமாய்
உன்னிடம் மட்டுமே
என் மனம்
பேசத் துடிக்கின்றது... ...!

நினைக்காதே
என்று சொன்னாலும்
உன்னை மட்டுமே
என் ஜூவன்
நினைக்கின்றது...!

உயிரோடு கலந்த
உனை மறக்க முடியும்
என ஒருநிமிடம்
நான் நினைத்தாலும்
அது பொய்யாகி விடுகின்றது...!

இதயமாய்
நீ இருக்க
இன்று வரை
உனை மறக்கமுடியாமல்
என் மனம்
தவிக்கின்றது...!

உயிரிலே கலந்தவள்
உனை மறப்பது
சாத்தியமல்ல
உன்னோடும்
உன் நினைவுகளோடும்
உயிர் வாழ்வேன்
கடைசி வரையில்... ...!

-த.சத்யா, இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.