........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 403

வாழ்க ஜனநாயகம்!

‌வணிகம் செய்ய இங்கே
வந்தவன் ஆண்டான்!
எப்படியோ நாம்
அவனிடமிருந்து மீண்டோம்!

அடிமைத்தளை அகன்றாலும்
இன-சாதி சமயத் தளைகள்
இன்னும் அகலவில்லை!

தீவிரவாதப் பேய்கள்
தினம் தேடி அலைகின்றன!
வாக்குகளை விலையாக்கி
அரசியலை வணிகமாக்கி
மக்களை ஏமாளிகளாக்கிய
நம் அரசியல்வாதிகள்!

இப்படித்தான் இந்தியா
முகவரிகளைத் தொலைத்து
முடிவில்லா முற்று புள்ளியாய்...
தேடிக் கொண்டிருக்கிறது...!

-"ராம்கோ" மாரிமுத்து
 

 

 

 

 

 

m

 

"ராம்கோ" மாரிமுத்து அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.