........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 412

முதல் பெண்..!

‌ஏனம்மா
சகோதரி
இன்னுமா உனக்குள்
இருட்டான எண்ணம்...

உன்
கூரான செயல்களால்
சமூக மூடத்தை கிழித்து
வீணாகாத காலத்துள்
பெண்மையின் விலாசம் எழுது...

போனது போகட்டும்
இப் புவியெங்கும்
புரட்சி விதையாகு...

என்ன ஆனாலும்
ஆண் வர்க்கம் தடுத்தாலும்
சாதனையில் நிமிர்ந்து
ஆல மரமாகு...

நீ பூவினமாய்
இருந்ததெல்லாம் போதும்
புதுமை விஞ்ஞானம் இயக்கு...

நாளைய உலகில்
நீதான் முதல் பெண்..!

-பாரதியான்.

 

 

 

 

 

m

 

பாரதியான் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.