........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 411

எங்கே போகிறோம்...?

‌மரப்பாச்சி வைத்து விளையாடிய
பிஞ்சு கரங்களில் இன்று - பொம்மை கை பேசி !
மொட்டை மாடியின் கைபிடிச் சுவரை
வாஞ்சையுடன் இழைத்த
தென்னை ஓலைகள்
தீய்ந்துபோய் பலநாள் ஆச்சு !
ஏரிஎல்லாம் குளமாகி
குளமெல்லாம் குட்டை ஆகி - அந்த
குட்டையும் தூர்ந்து - அதன் நடுவே
கான்கிரீட் கட்டிடம்
நெட்டயாக நிக்குது !
வண்டி புழுதியின் வரவுக்கு பயந்து
அடைத்த ஜன்னல் அடைத்த படியே.....
வீட்டுக்குள்ளே நெடும்தொடரில்
மூழ்கி இருப்போம் நாம் !

-ராம்கோ மாரிமுத்து.

 

 

 

 

 

m

 

"ராம்கோ" மாரிமுத்து அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.