கவிதை: 421
மரணத்தின்
மறுபக்கம்...!

நடு ரோட்டில்
நசுங்கிக் கிடக்கும்
நன்றியுள்ள
நாலு கால் ஜடம்..
சாலை வழி விபத்து..
சடுதியில் நடந்தது..
வாகன நெரிசல்
காலை மணி ஒன்பது
எம கண்டம்..
தலையில் அடி
ஊமைக் காயம்
காதுவழி ரத்தம்
எமதர்ம ராஜா
லாரி உருவில்...
பிணம்...
சாலை நடுவில்..
வாகனங்கள்
வலதும் இடதுமாய்
சீராய் அணிவகுத்து
இறந்த நாய்க்கு
இறுதி அஞ்சலி..
அழகான ஆண்நாய்...
பாவம்..
அனுதாபப் பேச்சு...
கழுத்தைச் சுற்றி
கருப்பு பெல்ட்..
உரிமை கோரி யாருமில்லை...
மூக்கு நீளம்..
ராஜபாளையம்...
இல்லை.. இல்லை..
இது..கிராஸ் பீரீட்..
சர்ச்சைக்குரிய
வம்சாவழி ஆராய்ச்சி...
‘பாடி’ எடுத்துச் செல்ல
பாசத்தோடு யாருமிலலை
அமரர் ஊர்திக்கும்
ஆள் சொல்ல வில்லை
மாலை போட்டு
பத்தி கொளுத்தி
கோடி உடுத்தி
பாடை கட்டி
பல்லாக்கு தூக்கி
சுடு காட்டில்
காரியம் செய்ய
நாலுபேர் இல்லை..
நட்ட நடு வெயிலில்
நாதியற்ற ஜீவன்...
வானத்தில் வட்டமிடும்
டாக்டர் குழு- கழுகுகள்:
கூர் நகமும், கத்திரி வாயும்!
இறங்க இடம் கிடைத்தால்
இரண்டு நிமிடத்தில்
இறுதிச் சடங்கும்
போஸ்ட்மார்ட்டமும்.!
அந்த
பொம்ரேனியன் பின்னால்
போகாதே.. கெஞ்சினேன்...
கேட்டால் தானே..!
அவள்
ரோட்டைக் கடந்து விட்டாள்
நீ..மாட்டிக் கொண்டாயே..!
பார்த்துக் கொண்டிருந்த
பாசமிகுந்த
பாதையோர பெண் நாய்
புலம்பிக் கொண்டிருந்தது
கண்ணீருடன்... ...!
-பாளை.சுசி.
|
|