........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 423

மழை நீரைச் சேமி!

‌கூவம் மணக்கவில்லை
யாரும் குறைபட்டுக்
கொள்வதில்லை..

பாலாறு தண்ணீர்
பருகி நாளாயிற்று
யாரும் அலட்டிக்
கொள்வதில்லை..

வைகையில் தண்ணீர்
வந்ததாய் யாரும்
வாய்மொழி பகர்வதில்லை..

தாமிரபரணியில்
தண்ணீர் ஓடினாலும்
தவணை முறை
குடிநீர் சப்ளை..
தவறாய்
யாரும் கொள்வதில்லை..

காவிரியில் நீர் வருமா?
உச்சநீதி மன்றமும்
நட்சத்திரக் கூட்டமும்
நடுவர் மன்றமும்
நம்பிக்கை ஊட்டவில்லை..!
செங்குளத்தில் நீர் இல்லை..
வேய்ந்தான் குளம்- இன்று
விரிவான பஸ் நிலையம்..!

ஓடைகள் காய்ந்து போய்
ஒற்றையடிப் பாதைகள்..!
வாய்க்கால்கள் வறண்டுபோய்
வண்டித் தடங்கள்..!
வயல் நிலங்களில்
வானுயர்ந்த கட்டிடங்கள்..!
நீர்த் தேக்கங்களில்
ஆடுமாடுகளின் மேய்ச்சல்..!

ஆற்றுப் பாசானம்..
கிணற்றுப் பாசானம்..
குளத்துப் பாசானம்..
அத்தனையும்,
நடைமுறைக்கு ஒவ்வாத
நேற்றைய கதைகள்..!

இன்று,
சொட்டுநீர் பாசானம்..!
அது என்னவோ?!
விவசாயிக்கு வருவது
சொட்டு சொட்டாய்
வியர்வையும்,
கண்ணீரும் தான்..!!
ஓட்டை விழுந்த வானம்..!
மாசுபட்ட ஆகாயம்..!
மழை பொழியாத மேகங்கள்..!

ஆனாலும்
மழைநீர் சேகரித்து
நிலத்தடி நீர் பெருக்கி
நாட்டை வளப்படுத்தி
நாமும் நலம் வாழ
நாளெல்லாம் ஆசை..!!

-பாளை.சுசி.

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.