........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 424

இதுவும் அதுதான்...!

‌ஆன்மீகத்தைக் கையிலெடுத்து
அனைவரையும் தன்பின்னால்
அணிவகுக்கச் செய்து,
காவி உடையின் மகத்துவத்தில்,
களங்கமாய்க் கறை சேர்த்து
முற்றும் துறந்த வேடத்தில்,
எங்கே திறந்தார்
என்று ஏளனம் பேசுமளவு
நம்பிக்கையைத் தகர்த்த
நயவஞ்சகம் விபச்சாரம் என்றால்,
அந்த அந்தரங்க அசிங்கத்தை
விலைபோட்டு இணையத்தளத்தில்
வியாபாரம் செய்து,
நீலப் படத்தை விடக் கேவலத்தால்,
நிறையவே பணத்தை
முதலில்லாமல் முழுவதும் சேர்த்து,
மஞ்சளைப் பூசிக் கொண்டதால்,
நெற்றிக் கண்ணைக்
காட்டுகிற போதும்,
குற்றம் குற்றமே!
புரிந்த செயல்
முற்றிலும் விபச்சாரமே!

-சித. அருணாசலம்.

 

 

 

 

 

m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.