........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 430

உன் வ‌ருகைக்காக..!

‌கதிரவன் முகம் பார்த்து
நாண‌முற்று
ரோஜாக்கள் சிவக்க‌
அவ்வ‌ழ‌கில் ம‌ய‌ங்கிய‌
தேனீக்க‌ள் அத‌னுள்
தேன் உண்டு க‌ளிக்க‌
ம‌ல‌ரினும் மெல்லிய‌
இற‌குக‌ள் கொண்ட‌
வ‌ண்ண‌ வ‌ண்ண‌
வ‌ண்ண‌த்துப்பூச்சிக‌ள்
சிற‌க‌டித்துப் பூங்காவெங்கும்
ப‌ற‌க்க‌ அவைக‌ளுள் ஒன்றாக‌
என் ம‌ன‌மும்
ப‌ற‌ந்து திரிந்து
ஆர்ப்ப‌ரித்த‌து
உன் வ‌ருகைக்காக‌க்
காத்திருந்த‌
ஒவ்வொரு விநாடியும்..!

-பிரதீபா, பாண்டிச்சேரி.

 

 

 

 

 

m

 

பிரதீபா அவர்களது இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.