........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 442

குறுங்கவிதைகள்

வானில் நிலா
பூமியில் வெளிச்சம்
குடிசைக்குள் இருட்டு

__________________________________

பகுத்தறிவு
பல்லி' சொல் கேட்டது போதும்
பள்ளி'யில் சொல்லுவதைக் கேள்!

__________________________________

அவள் செருப்பில்
முள் குத்தியது
வலித்தது என் இதயம்

__________________________________

கோவில்
பக்தி பரவசம் தரிசனம் இல்லை
வேதம் படித்தவரின்
வேலை வாய்ப்பகம்!

__________________________________

மேகம் சோகம்
சூரியக் கணவனின்
சூடு பொறுக்காமல்
மேக மங்கை வடிக்கும் கண்ணீர்.

-முனைவர் தியாகராஜன், சிங்கப்பூர்.

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.