........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 443

ஈடாகுமா அன்னையே...!

நீ
எனக்கு கருவறை தந்தாய்
நான்
உனக்கு கல்லறை அமைத்தேன்...!

நீ
எனக்கு உயிர் தளய
பாலூட்டினாய்
நான்
உனக்கு உயிர் பிரிய
கடைசிப் பால் சொட்டிட்டேன்...!

நீ
எனக்கு பசியறிந்து உணவும்
ருசியறிந்து திண்பண்டம் தந்தாய்
நான்
உனக்கு வருத்தம் முட்ட முட்ட
வாய்க்கரிசி போட்டேன்...!

நீ
எனக்கு நீரூற்றிக் குளிப்பாட்டி
தலைதுவட்டி உடைமாற்றி
சீவிச் சிங்காரித்து
அழகு பார்த்தாய்
நான்
உனக்குக் கண்ணீர் விட்டு
கதறியழுது
பெத்த கடன் கழிக்கிறேன்...!

ஆனாலும்....

 நீ
என் பிரவசத்தின் போது
பெறற மரணவதைக்கு ஈடாக
நான்
உனக்கு என் செய்வேன் அம்மாவே !

-பாரதியான்.

 

 

 

 

 

m

 

பாரதியான் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.