........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 445

இரத்த தானம்...!

இரத்த தானம் செய்திடுவோம்
இன்னுயிர் காத்திடுவோம்!

புள்ளுக்கு சதை தந்தான் சிபி
முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
குள்ளக்குளிரிய மயிலுக்கு
போர்வை தந்தான் பேகன்

தன்னலமின்றி ஓரறிவு
ஐந்தறிவு உயிர்க்கு
வாரி வழங்கிய வள்ளல்
வாழ்ந்த நாட்டிலே!
ஆறறிவு உயிருக்கு உதவிடுவீர்!
மூத்தோர் அறத்தைக் காத்திடுவீர்!

நபிக்கு உயிர்தந்த ஆடு
சீதைக்காக சிறகிழந்த கருடன்
கடல்கடக்க ராமனுக்குதவிய அணில்
சேவைமனத்துடன் மனிதனுக்கு
விலங்குகள் உதவிய நாட்டிலே!

மனிதனுக்கு மனிதன் உதவிடுவோம்
மனிதநேயத்தை வளர்த்திடுவோம்!
மரணத்தோடு போராடுவோருக்கு
மனித தெய்வம் ஆகிடுவோம்!

-விஷ்ணுதாசன்.

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.