........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 459

காதல் காட்டும் உண்மை!

காதல் என்றொரு கானம்
காதில் மெதுவாய்க் கேட்கும்
நெஞ்சம் என்றொரு கதவு
ஓசையின்றித் திறக்கும்

பசி என்றோர் உணர்வு
பஞ்சாய்ப் பறந்தே போகும்
தூக்கம் என்றொரு நிகழ்வு
கனவாய் மாறி வதைக்கும்

நேற்றை என்றொரு காலம்
நினைவிலிருந்து விலகும்
நாளை என்பதும் கூட
நிழலாய் மாறித் தேயும்

பந்தம் பாசம் எல்லாம் ஏனோ
பாரம் போன்றே தோன்றும்
பார்வை பேசும் மொழிகள்
பலவாய்க் கதைகள் கூறும்

உலகில் பெண்கள் எல்லாம்
உருவமில்லாப் பொம்மைகள் ஆகி
உனது உள்ளத்து ராணி மட்டும்
உலகின் அழகு ராணியாவாள்

ஆதாம் ஏவாள் காலம் தொட்டு
ராமன் சீதை காதை கண்டு
ஷாஜகான் மும்தாஜ் சரித்திரம் வரை
காதல் அனைவர்க்கும் பொதுவே

உறவும் பிரிவும் தந்திடும் உணர்வுகள்
மதங்கள் இனங்கள் பார்ப்பதில்லை
காதல் இங்கு கற்பிக்கும் உண்மை
கற்றறிந்தால் பல சாதல்கள் ஒழியும்

அணைகள் தண்டி இணையும் மனங்கள்
அடிப்படை அங்கு மனிதம் தானே
மறப்போம் பிரித்திடும் வகையை!
நினைப்போம் அனைவரும்
இணைந்திடும் நிலையை!!

-சக்தி சக்திதாசன், லண்டன்.
 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.