........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 465

அனுபவங்கள்.

அனுதினம் ஒரு நறுமணமாகும்
அனுபவங்கள் வாழ்வில் பொன்னாகும்.
அனுபவப் பாடங்கள் கண் திறக்கும்
மனுகுல உயர்வு ஏணியாகும்.
அனுபவங்கள் மறுபடி பேசப்படும்.
அனுமானங்கள் பிறருக்கு உதாரணமாகும்.

*****

நெருப்புச் சுட்டவன் விலகி நடப்பான்.
அரும்பை அழித்தவன் விலக்கப்படுவான்.
விரும்பி வாழ்த்துவோன் நம்பிக்கை பெருக்குவான்.
கரும்பு இசை, கவலை ஒப்பாரி
வரம்பில்லா மழையில் சொட்ட நனைதல்
திரண்ட அனுபவம் நிதானம் தரலாம்.

*****

குறுகிய பேச்சும், குதர்க்க வீச்சும்
இறுகிய அனுபவமாய் மனதை இரும்பாக்கும்.
இனிப்பும் கசப்புமாய், இசைவும் வெறுப்புமாய்
இணைந்து வருவதே வாழ்வு அனுபவங்கள்.
உருகிய அன்பும், உண்மை நிலையும்
உருப்பட வைக்கும் உரமான அனுபவம்.

-வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.
 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.