........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 466

பாளை சுசி கவிதைகள்.

சோக கீதம்..!

ஓசி வீட்டையும்
வளர்ப்புத் தாயையும்
கேiடையில் நினைத்து
குயில்கள் பாடுவது
முகாரி தான்..!

**********

படைப்பாளி..!

கல்லையும்
சிற்பியையும்
கடவுள் படைத்தான்.
கல்லைக்
கடவுளாக்கினான்
சிற்பி..!

**********

சுழற்சி

தன்னைத் தானே
சுற்றும் பூமி..
அதன் மேல்
பிறர் சுற்றி
தலை சுற்றி
தானே விழும்
பம்பரம்..!

**********

நகல்..!

நிழலுக்கு
முகவரி தேடினேன்
கிடைத்ததோ
மே. பா. விலாசம்..!

**********

சொல்லாமல்..!

சோதனை செய்த டாக்டர்
வேதனையோடு சொன்னார்
இதயத்தில் ஓட்டை என்று..!
அவரிடம் சொல்ல முடியுமா?
அது என் காதலி
வந்து போன
வாசல் என்று?

**********

ஒரு கதை..!

அவள் விட்டுச் சென்ற
காலடித் தடங்களில்
வீழ்ந்து கிடக்கிறது
ஒரு செருப்பின் கதை..!

**********

நினைவுகள் !

கடற்கரையில்
கருப்புப் பாறைகள்..
நுரைக்க நுரைக்க
நூறுமுறை குளித்தாலும்
அழுக்குப் போகவில்லை
பச்சைப் பாசிகளாய்
அவள் நினைவுகள்..!

**********

தியாகம்..!

இறந்த ஒருவர்
இடுகாடு சென்றதற்காய்
செத்துக் கிடக்கும்
வாடாமல்லியும்
லில்லிப் பூக்களும்
தார் சாலையில்..!

**********

மாற்று ஏற்பாடு..!

தாய் மிதித்து
குஞ்சு சாகாமலிருக்க
பருந்து காலில்
கோழிக் குஞ்சா?

**********

உயர்வு..!

நீ உதிர்க்கும்
முத்துச் சிரிப்பை விட
உன் கண்கள் சிந்தும்
கரிப்பு நீருக்கு
காரம் அதிகம்

-பாளை.சுசி.
 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.