........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 469

கொல்ல மறந்தாயோ?

பூமியை எடுத்துச்செல்
ஆழ்கடலை எடுத்துச்செல்
வானத்தை எடுத்துச்செல்
வானவில்லை எடுத்துச்செல்
விண்ணகத்தை எடுத்துச்செல்
எது வேண்டுமோ எடுத்துச்செல்

பறித்துச்சென்ற உயிரை
துடிக்கச் செய்திட முடியுமா...
அசைவில்லாத உடலை
அசைத்திட முடியுமா...
உடைந்து போன பந்தத்தை
ஒட்ட முடியுமா...
வீசிய சலனமற்ற காற்றை
மீண்டும்
சுவாசிக்க முடியுமா...

வீழ்த்திருக்கும்
அசைவற்ற உடல்கள்
உயிரற்ற உயிர்கள்
இடையில்
என்னை மட்டும்
கொல்ல மறந்தாயோ...?

-சந்தியா கிரிதர், புதுடெல்லி.

 

 

 

 

 

m

 

சந்தியா கிரிதர் அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.