........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 477

மழையில் நனையாமல்...!

பழ வண்டியை தள்ளும்
அவன் முகத்தில்
சோகம்...
பூ விற்கவில்லையே
என்று அவள் முகத்தில்
சோகம்...
சே! இந்த மழையால்
வியாபாரம் கெட்டுவிட்டதே
இப்படி
புலம்பல்கள்... எரிச்சல்கள்...!

பள்ளி மாணவர்களோ
மழைத்துளிகளில்
நனைந்து கொண்டு
ஆனந்தமாய் போகின்றனர்...

வேலைக்கு போகும்
ஆண்களும்
பெண்களும்
குடையை விரிக்கும் போதே
முகம் சுளித்து
இந்த மழை
இப்பொழுது தேவைதானா?
ஏன்று ரயிலை பிடிக்கும்
அவசர எரிச்சலில்...
முதலில் இந்த மழை
சின்ன சின்ன
தூறலாய் விழுந்தது
திடீரென பேய்மழையாய்
பெய்து
அனைவரின் சாபத்திற்கும்
ஆளாகி விட்டது...!

ஏனோ எனக்கு மட்டும்
இந்த மழையை பிடித்திருக்கிறது.
என்னவளின் நினைவுகளை
எனக்குள் கொண்டுவந்ததால்
நல்ல மழை...
குடை இருந்தும்
அவளிடம் குடை இல்லை
என்று பொய் சொன்னேன்
அவள் தாவணிக்குள்
நனையாமல் ஒளிந்து கொள்ள...
அவளுக்கும் தெரியாமல்
நன்றி சொன்னேன்

என் பைக்குள் இருக்கும்
குடை என்னை
முறைத்துப் பார்க்கும்போது
அப்பொழுது இருந்தே
மழை எனக்கு
சுகமாய் தெரிந்தது...!

இப்போழுது ஏனோ
என்மேல் விழும்
ஒவ்வொரு துளிகளும்
சுமையாய் தெரிகின்றது.
என்னவள்
என் அருகில்
என்னோடு இல்லாமல்...!

- த.சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.