........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 476

சூரிய அஸ்தமனம்

(இந்த தலைப்பைக் கொடுத்து சிலரை குறுங்கவிதை எழுதச் சொன்னால் எப்படியிருக்கும்?)

கிரிக்கெட் ஆட்டக்காரர்

அருணனோடு ஆட்டம்
ஆரம்பித்தான்
கடைசி ஓவரில் ரன் அவுட்

தொழிலாளி

ஓவர் டைம் இல்லை-
இவன் (சூரியன்)
பால் பாக்கி
எப்படி தருகிறான்?

ஓய்வு பெற்றவர் மனைவி

ஓய்வாகப் போகிற நேரம்
அதான்
மனிதர் எரிந்து விழுகிறார்

நடிகை

சந்திரன் வருவானென்று
சாயம் பூசிக் கொண்டால்
சூரியனின் முகம்
இப்படி சிவந்து போகிறதே!

வாக்காளர்

ஓட்டுப் போடத்
தெரியாமல்
வானத்தில் மையை
கொட்டி விடப்போகிறார்!

புதுத்தம்பதியர்

சாயங்காலமா
சூரியன்
கடல் மடியில்
சாயுங்காலமா?

- சா.துவாரகைவாசன்.

 

 

 

 

 

m

 

சா.துவாரகை வாசன் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.