........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 479

என்னை மன்னிப்பாயா?

இதயத்தில் நீ
இருக்கிறாய் என்றேன்
நீயோ
என் இதயமே!
நீதானடா என்கிறாய்
எத்தனை வலிகள்
எத்தனை சோகங்கள்
மனக்குழப்பங்கள்
நீ உனக்குள்
உணர்ந்திருப்பாய்...
அத்தனையும் இந்த
எளியவனுக்காக என்று
நினைக்கும் போது
நான் பட்ட
துயரங்களை யாரிடமும்
சொல்ல முடியாமல்
தவித்த தவிப்பு...
அன்பே
உண்மையில் நான்
பாக்கியசாலிதான்.
இந்த உலகத்தில்
பணம் கொடுத்தும்
கிடைக்காதப் பொருள்
அன்பு மட்டுமே
இந்த அன்பினை காட்டும்
உன்னை
என்னவளாய் அடைய
முன் ஜென்மத்தில்
நான் என்ன
புண்ணியம் செய்தேனோ?
உன் வேதனைகளை
புரிந்துக் கொள்ளும்
அறிவுகூட இல்லாமல்
இத்தனை நாள்
உன் கண்ணீருக்கு
காரணமாய் ஆகிவிட்டேனடி
என்னை மன்னிப்பாயா?

- த.சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.