........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 485

சத்தியம்! இது சத்தியம்!!

பார்த்தது கேட்டதைப் பச்சையாய்ப் பேசுதல்
சத்தியம், உண்மை, வாய்மை என்போம்.
சத்தியமென்பது உயர் மனத்தூய்மை,
பத்தியமானது, வாழ்வின் உன்னத ஒளிச்சுடர்.

சத்தியம் பேசும் மனிதரை இத்தரை
உத்தமர் என்று முத்திரை குத்தும்.
'சத்தியமே இலட்சியம்' பேசுதல் சுலபம்.
நித்திய வாழ்விலது கத்தியில் நடத்தல்.

சத்தியம் பேசிய அரிச்சந்திரன், காந்தி
எத்தனை துன்பம் கொண்டார் படித்தோம்.
கத்தி, பசியெனும் கடின துன்பம்
அசத்தியம் பேசவும் ஆக்கிடும் மனிதனை.

ஊக்கம் தரும் சத்தியப் பாதை
பூக்கள் பரப்பிய பாதையாகும் ஒருவனுக்கு.
ஈரணம் வளரும் பாலைவனம் ஆகாது
பூரண மனித நேயதேசமாகும் வாழ்வு.

- வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.