........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 484

குளம்! நீச்சல் குளம்!!

ஊரெல்லாம்
இருந்த குளங்கள்
பிளாட் போட்டு
விற்பனையாகி விட்டது;

ப்ளாட்டிற்குள்
ஸ்விமிங் புல்
கட்டியாகி விட்டது

ஸ்விம்மிங் புல்லின்
கரையில் இருந்து
நினைத்துக் கொள்கிறோம்!
குளக் கரையின்
சில்லென்ற காற்றை!

ஸ்விம்மிங் புல்
சிரித்துக் கொண்டது,
குளக்கரை நம் கைவிட்டு
எங்கோ போனது;

ஏதோ ஒரு விதத்தில்
ஏற்பட்ட இழப்பை
வளர்ச்சி என்றே
சொல்லிக் கொள்கிறோம்
நாம் மட்டும்!

- வித்யாசாகர்.

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.