........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 483

சிங்கையை உயர்த்துவோம்!

சோம்பல் அரக்கனைச்
சுட்டு வீழத்துவோம்...
வீணில் உண்டு வெறும் பேச்சுப்
பேசுவோரை விரட்டிடுவோம்..
எறும்புகளைக் குருநாதராய்
ஏற்றிட்ட மாந்தர்...

சலியா உழைப்போர்க்கு
வழிகாட்டும் நல்லரசு...
எடுத்ததை முடிக்கா வரை
இமை மூடா மக்கள்...
செய்யும் பணியில்
தெய்வத்தைக் காண்போர்...

இனத்தால் பலராயினும்
இதயத்தால் ஒன்றுபட்டு
உழைக்கும் உயர்மாந்தர்...
சொல்லிலும் செயலிலும்
தூய்மையைக் காணும்
உயர்மாந்தர்...

எங்கே வறுமை?
அது
இங்கே வந்தால்
உதைப்போம்...

எங்கே சோம்பல்?
அது இங்கே
இங்கே வந்தால்
வதைப்போம்...

எங்கே நோய்?
அது இங்கே
இங்கே வந்தால்
புதைப்போம்...

எங்கே உழைப்பு?
அது இங்கே
இங்கே வந்தால்
ஏற்போம்...

எங்கே புதுமை?
அது இங்கே
இங்கே வந்தால்
சேர்ப்போம்...

உழைப்பே எங்களின்
உயர்தெய்வம்...

மனிதன் படைத்ததே
மதமும் சாதியும்...
இறைவன் படைத்தா
இங்கனுப்பினான் அவைகளை?
இல்லை...

சிங்கைத் தோழா... சிந்தனை செய்...
அதனால் நாம்
குலஉரிமைக்கு இடந்தராது
குடியுரிமைக்கே இடமளிப்போம்...

உடல் வளர்ப்போம்...
உழைப்பால்...
உடலை வலிமை செய்வோம்...
உயிரினும் மேலாய்...
உழைப்பால்
உயர்த்துவோம் சிங்கையை...

- முனைவர் தியாகராஜன்.

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.