........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:49

இதிலென்ன சந்தேகம்...?

இதயத்தின் துடிப்பு
அதிலே இருக்கும் உயிர்மூச்சு
வையகத்தின் வாழ்வு
வழங்குவதோ ஏழைகளின் உழைப்பு

சிலதுளி கண்ணீரின் உப்பு
பெரும் சோகம் வெளிப்பு
சிலபேரின் உழைப்பு
பலபேரின் சிரிப்பு

காலமெல்லம் செருப்பின்றி
காயத்துடன் நடக்கும் ஏழை
காலையில் ஒன்று மாலையில் ஒன்று
செருப்பினிலும் வேளை கொண்ட
பணக்காரன் செருக்கு...

தம்பி !
கொஞ்சம் விழித்துக் கொள்....

சமனில்லா உலகமிது
சமநிலை காணவேண்டும்
சமுதாயத் துண் நீ
சரித்திரத்தின் வேர் நீ

உலகத்தின் வரைபடத்தை
உண்மைத் துணிச்சலினால்
உன்னால் மாற்ற முடியும்
தம்பி உன்னால் முடியும் ....

கண்ணீரில் கரிக்கும் உப்பு
தண்ணீரில் இல்லை காண்பாய்
நம்மூரின் இல்லாமை நீக்கி
நாளைகளின் எழைகளைத் தூக்கு

கல்வியை வளர்த்துக் கொள்
காசுபணம் சேர்த்துக் கொள்
கூட வரும் சகோதர, சகோதரியரை
கூடப்பிறந்தோராய் எண்ணிக்கொள்

இதிலென்ன சந்தேகம்...?
இனியென்ன பேச்சு
இதயத்தில் தீரம் கொண்டு
உலகத்தின் ஏழ்மை நிலையை
உடைத்து நீயும் நலமான
சுயமான நாளைய சமுதாயத்தை
நன்றாக வளர்த்திடு...

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 

 

 

m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.